
கொடைக்கானல் பகுதியில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, வான்வெளியில் ட்ரோன்கள் (Drone) பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.சரவணன் இ.ஆ.ப அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொடைக்கானல் வான்வெளி பகுதிகளில் ட்ரோன்கள் இயக்குவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தடை உத்தரவை மீறி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.