திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடிகளில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் நேரில் ஆய்வு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருப்போரூர் தொகுதியில் வேட்பாளர்களாக (திமுக கூட்டணி) சார்பில் வி.சி.க வேட்பாளர் பன்னீர்தாஸ், போட்டியிடுகிறார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவும், வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான SRL. இதயவர்மன் (திமுக), ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது பல்வேறு வாக்குச் சாவடிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதில் ஒரு பகுதியாக திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதிகளில் உள்ள பல்வேறு சாவடிகளுக்கு நேரடியாகச் சென்று, அங்கு நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன், பூபாலன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *