
புது தில்லி, ஏப்ரல் 16:
ஆஸ்திரிய பிரதமர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர், நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது முதல் இந்திய பயணத்தை இருதரப்பு உறவுகளில் ஒரு “மைல்கல்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஏப்ரல் 16, 2026 அன்று புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்த சந்திப்பில், இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் தொடர்பாக “நிலையான மற்றும் நீடித்த அமைதி” ஏற்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, ஏப்ரல் 15 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆஸ்திரிய பிரதமர் கிறிஸ்டியன் ஸ்டாக்கரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.