மரிய நிவாஸ் பள்ளியில் மழலை மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா:

பொழிச்சலூர், ஏப்ரல் 13:
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகிலுள்ள பொழிச்சலூர் பஜனை கோவில் தெருவில் இயங்கி வரும் மரிய நிவாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 2025-26 ஆம் ஆண்டு மழலை (LKG, UKG) படிப்பை முடிக்கும் மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை (13/04/2026) சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் தலைவர் ஜே. ரங்கநாதன் தலைமையிலும், தாளாளர் ஆர். பத்மினி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த (Graduation Day) விழா சிறப்பாக அமைந்தது.

இந்த விழா, மாணவ மாணவிகள் தங்களது ஆரம்பக் கல்விப் பயணத்தின் ஒரு முக்கிய கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் கொண்டாடுவதோடு, முதல் வகுப்பு கல்விக்கான அடுத்த படியாகவும் அமைந்தது.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பச்சை நிற நீண்ட அங்கி மற்றும் சதுர வடிவத் தொப்பி அணிந்து கலந்து கொண்டனர். அவர்களின் கல்வி நிறைவை ஒட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இச்சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் R.பத்மினி, தலைமை ஆசிரியர் V.விஜயகுமாரி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் C.தனசேகரன் ஆகியோர் வழங்கினர்.

விழாவின் நிறைவில், அடுத்த கட்டப் பள்ளிக் கல்விக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களது ஆசிரியைகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *