
சென்னை, ஏப்ரல் 12:
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தலை நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடத்துவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் பகுதியாக, தமிழக உள்துறை செயலாளராக பணியாற்றி வந்த தீரஜ் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தமிழக சுற்றுலாத்துறைச் செயலாளராக இருந்த கே.மணிவாசன், இ.ஆ.ப., புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முக்கியமான நிர்வாக மாற்றம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.