கேட்பாரற்று கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்

சென்னை : நீலாங்கரை ஜே-8 போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் அவர்கள், 27/03/2026 அன்று காலை வெட்டுவாங்கனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கேட்பாரற்று கிடந்த ஒரு பணப்பையை கண்டெடுத்தார்.

அந்த பணப்பையில் இருந்த தகவல்களின் அடிப்படையில், அதன் உரிமையாளரை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 28/03/2026 அன்று அந்த நபரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, பணப்பையில் இருந்த ரூ.10,200/- பணத்துடன் சேர்த்து முக்கிய ஆவணங்களும் நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த மனிதநேயமான செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *