சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டத்தின் கீழ் 7,000 கோடி ரூபாய் கடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

தமிழ்நாட்டில் உள்ள இளம்பெண்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த “சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டத்தின் கீழ் 7,000 கோடி ரூபாய் கடன் வழங்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை மற்றும் பட்ஜெட் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர்,புதிய தொழில் தொடங்கி, தொழில் முனைவோராக மாறுவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் தொழில்முனைவோர் கடன்கள் (Entrepreneurship Loans) வழங்கப்படவுள்ளன.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் இக்கடன்கள் விநியோகிக்கப்படும்.

இந்த ஆண்டிற்கான சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கான கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த 7,000 கோடி ரூபாய் நிதி திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *