
சென்னை, ஜூன் 11:
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) வி.என்.அண்ணாதுரை MSW அவர்களை, மார்னிங் டைம்ஸ் பத்திரிகையின் சென்னை மாவட்ட செய்தியாளர் ரியாஸ் அலி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
அப்போது, மார்னிங் டைம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான சிறப்பு மலர் மற்றும் இதழை இணை இயக்குநர் அவர்களிடம் ரியாஸ் அலி வழங்கினார்.
மேலும், செய்தித்துறை மற்றும் ஊடக வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும், மார்னிங் டைம்ஸ் பத்திரிகையின் பணிகள், சமூகப் பங்களிப்புகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் இணை இயக்குநரிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
இச்சந்திப்பு அன்பும் மரியாதையும் நிறைந்த சூழலில் நடைபெற்றது.