திருப்போரூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம்: ‘பானை’ சின்னத்தில் இரா.பன்னீர் தாஸ் வாக்கு சேகரிப்பு!

திருப்போரூர்: ஏப்ரல் 13,
திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளரான இரா.பன்னீர் தாஸ் அவர்கள், ‘பானை’ சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு கேட்டு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரம் திருப்போரூர் பகுதியிலிருந்து கோவளம் ஊராட்சி வரை விரிந்தது.

இந்த நிகழ்வில் திருப்போரூர் தொகுதி மஜக பொறுப்பாளர் அப்துல் சமது தலைமையில் மஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *